search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிதாசன் பல்கலைக்கழகம்"

    • திருச்சி விமான நிலையத்தில் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.
    • பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். இன்று காலை திருச்சி வரும் அவர், திருச்சி விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அதன்பின் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    பிரதமர் மோடி கலந்த கொள்ளும் திருச்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருநது புறப்பட இருக்கிறார்.

    • பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குனர் டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட சேர்மன் மருத்துவர் வரதராஜன், மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், தஞ்சை மிராசுதார் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் காயத்ரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    ×